விளையாட்டுகளும் நானும்

பொதுவாகவே சிறு வயதில் இருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் இருந்துதான் வந்திருக்கிறது. பள்ளிகூட நாட்களில் அங்கு  விளையாடப்படும் எல்லா விளையாட்டுகளிலும் பெரும்பாலும் கலந்துகொள்வேன், குறிப்பாக கால்பந்து, தடகளம் இரண்டிலும் பெருத்த ஆர்வம் இருந்திருக்கிறது. மாவட்ட அளவில் கால்பந்திலும், நீளம் தாண்டுதல் போட்டியிலும் பரிசுகள் வாங்கி இருக்கிறேன்.

பிற்பாடு சென்னை வந்த பிறகு கிரிக்கெட்டில் ஆர்வம் வந்தது...அதன் பின் செஸ் விளையாட்டில் ஆர்வம் வந்தது. செஸ் விளையாட  இடப்பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்பதால் அதில் ஆர்வம் அதிகமானதில் ஆச்சர்யம் இல்லை எனக்கு.

இப்போதும் உலக அளவில் நடக்கும் எல்லா வகையான விளையாட்டுகளையும் பத்தி .படித்து வருகிறேன். உலக அளவில் நடக்கும் எல்லா விளையாட்டுகளையும் அதன் இறுதி நிலவரத்தை பேப்பரிலோ, தொலைகாட்சியிலோ தெரிந்துகொள்வதில் மிக்க ஆர்வம் உண்டு. எனக்கு மிக பிடித்த விளையாட்டுகள் என்ற வகையில் டாப் ஐந்து விளையாட்டுகள் என்ற வகையில் பேட்மிண்டன், கால்பந்து, செஸ், கிரிக்கெட், தடகளம் என சொல்வேன். இப்போதும் உடம்பை Fit ஆக வைத்திருக்க காரணமே விளையாட்டின் மேல் உள்ள விளையாடும் ஆர்வம்தான்!

இதுவரையிலும் ரசித்த விளையாட்டு வீரர்கள் என்ற வகையில் பிடித்த பத்து பேர்கள்....

கார்ல் லீவிஸ்
செர்ஜி புப்கா 
சச்சின் டெண்டுல்கர் 
உசேன் போல்ட் 
சாய்னா  நெஹ்வால் 
விஸ்வநாதன் ஆனந்த் 
லியொனல்  மெஸ்ஸி 
கேரி காஸ்பரோவ் 
ரோஜெர் பெடரர் 
மகேந்திர சிங் டோனி 

                                                                              ( செப்டம்பர் 2015 )